சீரடி சாய்பாபா கோயிலில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை
மகாராஷ்டிரா மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி பக்தர்கள் 4 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ஏப்ரல் 5ம் தேதி முதல் 7 தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து , 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கை
செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
