

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, அந்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இன்று தொடங்குகிறது.