"மகரவிளக்கு - மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம்" - சபரிமலை தேவஸ்ம்போர்டு

மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் யாரும் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
"மகரவிளக்கு - மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம்" - சபரிமலை தேவஸ்ம்போர்டு
Published on
மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் யாரும் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இளம் பெண்கள், பெண்ணிய அமைப்பினர் சபரிமலைக்கு பயணித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது, சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்களின் வருகையால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாவதாகவும், இது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பத்மகுமார் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com