Sabarimalai Crowd | சபரிமலைக்கு மாலை போட்டு போறீங்களா? - வெளியான புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3 புதிய கட்டுப்பாடுகளை கேரள உயர் நீதிமன்ற தேவசம் சிறப்பு அமர்வு விதித்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில்
ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலால், சாமி தரிசனம் செய்ய முடியாமல் பல பக்தர்கள் திரும்பி சென்றனர்.
இதனால், உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர் நீதிமன்ற தேவசம் சிறப்பு அமர்வு குறைத்தது.
மேலும், பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு உடனடி தரிசன முன்பதிவு மாற்றப்பட்டு, அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
சபரிமலையில் காணிக்கை பணம் எண்ணும் இடத்திற்கு சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
புல் மேடு மற்றும் எரிமேலி கானகப் பாதைகளில் முன்கூட்டியே பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இரு வழித்தடங்களிலும் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தேவசம் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
