புதுச்சேரியில் அழுகிய நிலையில் அங்கன்வாடி முட்டைகள் | பணியாளர்கள் அலட்சிய பதில்

x

புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கிருமாம்பாக்கம்‌ இந்திரா நகர் அங்கன்வாடியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன. முட்டைகளை வாங்கிச் சென்ற மக்கள் சமைப்பதற்காக உடைத்த போது, துர்நாற்றம் வீசியது.

இது குறித்து புகார் அளித்த பெண்களிடம் பணியாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அழுகிய முட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்