புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி, ஒடிஷாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்
Published on

ஒடிஷா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத வளர்பிறையின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை தொடங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. இதற்காக, 16 சக்கரங்கள் கொண்ட ஜெகந்நாதர் ரதம், 12 சக்கரங்கள் கொண்ட சுபத்ரா ரதம், 14 சக்கரங்களை கொண்ட பாலபத்திரர் ரதம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. ரத யாத்திரையையொட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புரியில் குவிந்துள்ளனர். ரதங்கள் செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இரவு சென்றார். ரத யாத்திரை தொடங்க உள்ள நிலையில், அவர் சாமி தரிசனம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com