Punjab | திடீரென வெடித்த மொபைல்.. ரயிலில் தக..தக..வென எரிந்த தீ.. அலறி தெறித்த மக்கள்

x

பஞ்சாப் அமிர்தசரசில் இருந்து பீகாரின் புர்னியா நோக்கி சென்று கொண்டிருந்த ஜன்சேவா எக்ஸ்பிரஸ் ரயிலில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டியில் தீப்பற்றி எரிய துவங்கியதும் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்... பயணிகள் சிலர் தீ விபத்தில் இருந்து தப்ப கீழே குதித்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பான்களின் உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்