புதுச்சேரியில் லேசாக ஆட்டத்தை காட்டிய மழை..பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்ததால் பணிக்கு சென்றோரும், பள்ளிக்கு சென்ற மாணவர்களும் சிரமம் அடைந்தனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியின் நகரப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.

X

Thanthi TV
www.thanthitv.com