Puducherry | LJK | மீனவர் பிரதிநிதிகள் ஜோஸ் சார்லஸ் மார்டினுடன் கலந்துரையாடல்

x

புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்டமைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள், லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து, மீனவர் சமூகத்துக்கான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில், மீனவர் சமூகத்தின் கல்வி, வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதில், மீனவர்களுக்கான பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் இடஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும், ஆரம்பக் கல்வியிலிருந்து ஆராய்ச்சி கல்வி வரை முழுமையான இலவச கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், கூட்டுறவு சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும், கடலில் விபத்தில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் திட்டம் உருவாக்க வேண்டும், முழுமையான காப்பீடு வழங்க வேண்டும், சட்டமன்ற பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மற்றும் சிறு தொழில் மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பனவும் கோரப்பட்டன. இந்த கோரிக்கைகள் குறித்து கவனமாக பரிசீலித்து, உரிய நிலைகளில் எடுத்துச் செல்லப்படும் என ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்