"அரிசிக்கு பதில், பயனாளிகளுக்கு பணம்"- கிரண்பேடி

"இலவச அரிசியை தொடர விருப்பம்"- நாராயணசாமி
"அரிசிக்கு பதில், பயனாளிகளுக்கு பணம்"- கிரண்பேடி
Published on
இலவச அரிசிக்கு பதிலாக, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, முடிவு எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, அரிசி வழங்கும் திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில், இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டதை போல், அரிசிக்கு பதில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கும் முறையை தொடர கோரியுள்ளதாக கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com