புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். புதுச்சேரி திம்மநாயக்கன் பாளையம் பகுதியை சார்ந்த சங்கர் என்பவரின் மகள் சினேகபிரியா, அங்குள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் படித்து 520 மதிப்பெண் பெற்றதோடு, நீட் தேர்விலும் 279 மதிப்பெண்களை பெற்றார். இதையடுத்து, புதுச்சேரி அரசு இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், மாணவி சினேகபிரியாவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, அவருக்கு மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.