சொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்

உத்தரபிரதேசத்தில் நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்
Published on

பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வாரணாசி மற்றும் சாரநாத் இடையே, 1500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை அவர் தொடங்கி வைத்தார்.மொத்தம் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கினார்.

மேலும், நாட்டின் முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையும் மோடி ஆரம்பித்து வைத்தார். அதன் அடையாளமாக, கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com