ரயிலை கவிழ்க்க சதி..? - திருத்தணி ரயில் நிலையம் அருகே அதிர்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாள இணைப்பு பகுதியில் மர்ம நபர் சிமென்ட் கல் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என்ற கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ரயில் தண்டவாளங்கள் இணைக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் ரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தண்டாவாளத்தில் சிமெண்ட் கல் இருந்ததை கண்டறிந்து அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .


Next Story

மேலும் செய்திகள்