ப.சிதம்பரத்தின் ஜாமீன் ஒத்தி வைப்பு

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ப.சிதம்பரத்தின் ஜாமீன் ஒத்தி வைப்பு
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப,சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்த விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அப்போது நாட்டின் பொருளாதார குற்றங்கள் மிகவும் அபாயகரமானது எனவும் அது தேச நலனை பாதிக்கும் எனவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும் போது, சாதாரண மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் எனவும் அதனால் தான் அவரை சிறையில் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com