இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்

இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்
இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்
Published on

பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கையா நாயுடுவும் தனித்தனியாக அனைத்துக்கட்சித் தலைவர்கள்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஜனவரி 8 ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவையில் 15 முக்கிய மசோதாக்களையும், மாநிலங்களவையில் 8 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, அயோத்தி விவகாரம் உள்பட பல முக்கிய பிரச்சினைகளை, நாடாளுமன்றத்தில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால், இந்த கூட்டத்தொடர், அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com