பதான்கோட்டில் அத்துமீறி கால் வைத்த Pakistan நபர் - அதிரடியாக செயல்பட்ட BSF

x

Jammu || பதான்கோட்டில் அத்துமீறி கால் வைத்த Pakistan நபர் - அதிரடியாக செயல்பட்ட BSF

இந்தியாவிற்கு ஊடுருவிய பாகிஸ்தான் பிரஜை கைது

ஜம்முவின் பதான்கோட் பகுதியில் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டவரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபரின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததும், எல்லைப் பாதுகாப்புப்படையினர் உஷாரடைந்தனர். அவர் சட்டவிரோதமாக சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவிற்குள் நுழைந்த போது, அவரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தான் உளவாளியாக இருக்கலாம் என சந்தேகமடைந்த எல்லைப் பாதுகாப்புப்படையினர், அந்த நபரை அடுத்தகட்ட விசாரணைக்காக நரோட் ஜெய்மால் சிங் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்