அடிவாங்கியும் அடங்காத பாகிஸ்தான் - அதிர்ச்சி தகவல்.. வெளியான சாட்டிலைட் வீடியோ
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில், சேதங்களை குறிப்பிடும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முரிட்கே, பஹவல்பூர் ஆகிய இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் பஹவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமான ஜாமியா சுபான் அல்லா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தலைமையகமான மார்கஸ் தைபா மற்றும் முரிட்கே ஆகியவற்றின் சேதங்களை வெளிப்படுத்தக்கூடிய செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
