திறக்கப்பட்ட நடை.. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேதார்நாத் கோயில்

x

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயில், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் இக்கோயில் வழக்கமாக மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கோடைக்காலம் என்பதால் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மலர் அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தரிசனம் செய்தார். இதேபோல் சார்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களும் தரிசனம் செய்தனர். கோயில் திறக்கப்பட்டதையொட்டி கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில் நடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 4ம் தேதி பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்