

சண்டிகரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டியை மணந்துள்ளார். முதுகலை பட்டதாரியான பிரவீன் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எபுனேர் என்ற 65 வயது மூதாட்டியை சமூக வலை தளம் வாயிலாக, காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சண்டிகர் வந்த அவரை, பிரவீன் திருமணம் செய்தார். அடுத்த மாதம் இருவரும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளனர்.