5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதா? - ராகுல்காந்தி கேள்வி
இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது 5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 5 ஜெட் விமானங்கள் பற்றிய உண்மை என்ன?.... அதுகுறித்து நாட்டு மக்களுக்கு தெரிந்துகொள்ள உரிமை உள்ளதாகக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய வீடியோவையும் அதில் பதிவிட்டுள்ளார்.
Next Story
