டாக்டர் மீது ஆசிட் வீச முயன்ற நர்ஸ்...

திருப்பதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டாக்டர் மீது செவிலியர் ஒருவர் ஆசிட் வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் மீது ஆசிட் வீச முயன்ற நர்ஸ்...
Published on
திருப்பதியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு செவிலியர் அருணகுமாரியோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அருணகுமாரியுடனான உறவை ஆதர்ஷ் விலக்கிக் கொள்ளவே அதில் ஆத்திரமடைந்த அவர், டாக்டரை பழி வாங்க திட்டமிட்டார். இந்த நிலையில் தன் மனைவியுடனான விவாகரத்து வழக்கிற்காக திருப்பதி நீதிமன்றத்திற்கு வந்த அவர் மீது அருணகுமாரி ஆசிட்டை வீச முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். உடனடியாக தன் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அருணகுமாரி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com