நீட் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள்

நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 4 ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், அரசு பள்ளி மாணவர்கள் 1,337 பேர் வெற்றி பெற்று, சாதனை படைத்ததாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எனினும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நிறுவனம், 32 மாவட்ட வாரியாக ஆயிரத்து 291 மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், 7 மாணவர்கள் மட்டுமே 300 முதல் 392 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மற்றவர்கள் அதற்கும் குறைவாக, குறிப்பாக 200 மதிப்பெண்களுக்கும் கீழே தான் பெற்றுள்ளனர்.

சென்னையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் 392, சேலத்தை சேர்ந்த தாமஸ் 321, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாராணி 321 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

முதல் 7 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிபில் சேர வாய்ப்பு கிடைக்கலாம் என மருத்துவ கல்வி வட்டாரங்கள் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com