சென்னையில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

x

திருமங்கலத்தில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியில் சர்வீஸ் சென்டர்களில் இருந்து சொகுசுகார்கள் திருடப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் சட்டேந்திரசிங் ஷகாவாட் என்பரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடியது அம்பலமானது. இந்த நிலையில் அவர் வட இந்தியாவில் விற்ற ஒரு கார் ராஜஸ்தான் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் தமிழக போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் காரின் பதிவு எண் மற்றும் தோற்றம் மாற்றப்பட்டு , 80 நாட்களில் 45 ஆயிரம் கிலோ மீட்டர் வாகனம் இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருடப்பட்ட கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்