Karnataka | கர்நாடகா காங்., எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்பு தீர்ப்பு
கர்நாடகா காங்., எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்பு தீர்ப்பு
Karnataka | கர்நாடகா காங்., எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்பு தீர்ப்பு #karnataka #mla #judgement #thanthitv கர்நாடக பாஜக தலைவர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கை விசாரித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தது. அனைவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் வன்முறை தொடர்பான இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
