வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு - கதிகலங்கிய கேரளா
கேரளாவில், கண்ணூரில் இருந்து கொட்டியூர் வழியாக வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்வதால், வயநாடு செல்லும் சாலையில் பால்சுரம் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மழை தொடர்வதால், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
