செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்
செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
Published on
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடல்பகுதியில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு, சடலமாக மீட்கப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த ஹசீப் மாலிக் என்பவர், தமது நண்பர்களுடன் குளச்சல் கடல்பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார். அதில் மாயமான ஹசீப் மாலிக்கை, கடந்த 3 நாட்களான மீனவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கடலில் ஒரு நாட்டிக்கல் தொலைவில் ஹசீப் மாலிக்கின் உடல் மிதந்ததையடுத்து, உள்ளூர் மீனவர்கள் சடலத்தை மீட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com