மகாராஷ்டிராவில் வதந்திகளால் பறிபோன அப்பாவி உயிர்கள்

குழந்தை திருடர்கள் என நினைத்து 5 பேர் கொலை
மகாராஷ்டிராவில் வதந்திகளால் பறிபோன அப்பாவி உயிர்கள்
Published on

மகாராஷ்டிராவின் துளே மாவட்டத்தில் குழந்தை திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் ஐந்து பேரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் ரெய்ன்படா கிராமத்திற்கு வாகனத்தில் வந்து இறங்கிய ஐந்து பேர், குழந்தை திருட வந்ததாகவும் அவர்கள் மக்களை கடத்தி சிறுநீரகம் திருடுபவர்கள் எனவும் வதந்திகள் வந்துள்ளன. இதனால் சந்தேகத்தின் பேரில் 5 நபர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com