உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் போலீசார் வந்த வாகனம் மீது நிஸ்கத் கட்சியினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில், 45 வயதான காவலர் சுரேந்திர வாட்ஸ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் உத்தரபிரதேச வருகையை கண்டித்து நிஸ்கத் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 23 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.