கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி அணையில் இருந்து 15000 கன அடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து கர்நாடகாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல்

கபினி அணைக்கு நீர் வரத்து, விநாடிக்கு

30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

கபினி, அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடிகளே உள்ள நிலையில்,

இன்று இரவு அணை நிரம்பிவிடும் என

என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்

அணையில் இருந்து வெளியேற்றப்படும்

நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக

உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு காவிரியில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com