ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும், NEET தேர்வு செப்டம்பர்13 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும் போது போதுமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com