பத்மநாப சுவாமிக்காக 5 மணிநேரம் மூடப்படும் விமான நிலையம்

x

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு ஊர்வலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் 5 மணி நேரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள இக்கோயிலில் இந்த வருடத்திற்கான பங்குனி ஆறாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி 11ஆம் தேதி மாலை 4 முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும் என்றும், இந்த சமயத்தில் விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்