"ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு"

ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
"ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு"
Published on
ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை சிதம்பரம் கலைத்து விடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆவணங்களும் முன் வைக்கப்படவில்லை என அவர் வாதாடினார். மேலும், சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கிறோம் - நிபந்தனைகளை ஏற்கிறோம் என்று தெரிவித்த கபில்சிபல், ஜாமீன் வழங்குமாறு கோரினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com