இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த அதிகாரி மீட்பு

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி, மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த அதிகாரி மீட்பு
Published on

பாய்மரப் படகில் உலகை வலம் வரும் போட்டியில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த அபிலாஷ் தோமி, கலந்துகொண்டார். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் வந்தபோது, கடும் புயலால் அவரது படகு சேதமடைந்தது. மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாத நிலையில், 3 நாட்களாக அவர் கடலில் தத்தளித்தார். கன்னியாகுமரிக்குத் தெற்கே ஐந்தாயிரத்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரை மீட்க இந்தியக் கடற்படையின் கப்பல்கள், விமானம், ஹெலிகாஃப்டர் ஆகியன சென்றன. இந்தியக் கப்பல்கள் அங்குச் சென்று சேர்வதற்கு முன்பே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் என்கிற மீன்பிடி கப்பல், அப்பகுதிக்குச் சென்று அபிலாஷ் தோமியை மீட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com