ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 13 பேர் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்து உள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 13 பேர் பத்திரமாக மீட்பு
Published on

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன. பேருந்து பயணிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படும் சூழலில், இதுவரை அங்கிருந்து 13 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com