கனமழையால் திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்
பீகார் மாநிலம், பாட்னா நகரில், திறக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலம், கனமழையால் சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் இடைவிடாமல் பெய்யும் மழையால் பாலத்தில் சேதம் ஏற்பட்டு, பள்ளம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
Next Story
