குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது

குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது
குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது
Published on

சிபிஐ எஸ்.பி கிருஷ்ணராவ் தலைமையிலான குழு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்தில் விசாரணை நடத்தியது. குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு நடத்தியது யார்? என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து மாதவ்ராவ் குட்கா வாங்கியது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து முழு விவரங்களை சிபிஐ சேகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாதவ்ராவிடம் இருந்து, கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் உள்ள தகவலின் அடிப்படையில் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com