வீட்டு தங்கத்திற்கும் வருகிறது வேட்டு? : மத்திய அரசின் அடுத்த அதிரடி

கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தங்கத்திற்கு கட்டுபாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வீட்டு தங்கத்திற்கும் வருகிறது வேட்டு? : மத்திய அரசின் அடுத்த அதிரடி
Published on
கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தங்கத்திற்கு கட்டுபாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, இந்தியாவில் கணக்கில் கட்டப்படாத கருப்பு தங்கத்தை கணக்கில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் படி, தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும்,வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள தங்கத்திற்கு 33 சதவிகிதம் வரி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com