மகாராஷ்டிராவில் கோயிலுக்குள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

மகாராஷ்டிராவில் கோயிலுக்குள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் அருகே உள்ள, நிக்டி கோயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமி கும்பிட வந்த சிறுமியிடம் அப்பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூண் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி அத்துமீற முயன்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கோயில் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதனை அடிப்படையாக வைத்து அத்துமீறிய கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#maharashtra #temple #girl #pocso #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com