"குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்" - நகராட்சி நிர்வாகம் திட்டம்

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் நகராட்சி நிர்வாகம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் குப்பைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும்.
"குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்" - நகராட்சி நிர்வாகம் திட்டம்
Published on

நாம் வெளியில் செல்லும் போது குப்பைகளை கண்டாலே மூக்கை பொத்தி கொண்டு செல்ல கூடிய நிலையில் உள்ளது இன்றைய மாநகரங்கள். இதனை படிப்படியாக கட்டுப்படுத்த தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மை துவங்கியுள்ளது. மக்கும், மக்காத மறு சுழற்சியாகாத பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீண்டும் பயன்படுத்தக் கூடிய 1 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து இதுவரை 22 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தமிழகத்தில் உள்ள 7 பெரிய சிமெண்ட் நிறுவனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 135 உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அறிவியல் பூர்வமாக அழிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதத்தில் குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com