இனி சுத்தமா வரியே கிடையாது இன்சூரன்ஸ் எடுத்தவர்கள் கவனத்திற்கு

x

இந்தியாவுல காப்பீடு திட்டம் என்பது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஒரு சேமிப்பா பார்க்கப்பட்டது, ஆனா காலப்போக்குல அதுவே ஒரு அடிப்படையா மாறியிருக்கு, மக்களின் பொருளாதார வளர்ச்சியா இத பாத்தாலும், லட்சங்களில் ஆகும் மருத்துவ செலவுகள், நிலையில்ல வேலை வாய்ப்புனு நம்முடைய எதிர்காலத்தையும், நமக்கு பின்னர் குடும்ப எதிர்காலத்தின் மீதான பயத்தாலயும் காப்பீட்டு திட்டத்துல முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்ததெந்த இன்சூரன்ஸ்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டது. எவ்வளவு சேமிக்கலாம்னு பார்க்கலாம் ஜி.எஸ்.டி கூட்டம் கூடும்போதெல்லாம் பல்வேறு வரிகளை குறைக்க வேணும்னு வலியுறுத்தப்படும், அதன்படி இன்சூரன்ஸ் மீதான வரிகளையும் குறைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில கடந்த ஆண்டு, கூட்டதுல கால அடிப்படையிலான ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மூத்த குடிமக்கள் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படட்டது. மூத்த குடிமக்கள் அல்லாத தனிநபர்கள் ரூ.5 லட்சம்வரை 'கவரேஜ்' கொண்ட மருத்துவ காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது போன்ற பரிந்துரைகளுக்கு செவி சாய்க்கும் வகையில், 56வது ஜி.எஸ்.டி கூட்டத்துல இரண்டு வகையா இருந்த வரிய முற்றிலுமா நீக்கி இருக்காங்க


Next Story

மேலும் செய்திகள்