Flights Cancelled | "ஜூன் முதல் தினமும் 250 உள்நாட்டு விமானங்கள் ரத்து"
"ஜூன் முதல் தினமும் 250 உள்நாட்டு விமானங்கள் ரத்து"
Flights Cancelled | "ஜூன் முதல் தினமும் 250 உள்நாட்டு விமானங்கள் ரத்து" #flightscancelled #thanthitv இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் தினமும் சுமார் 250 உள்நாட்டு விமானச் சேவைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளன. விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், கோடை விடுமுறைக்குப் பிந்தைய பயணிகளின் தேவை சற்று குறைந்துள்ளதாலும் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
