பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்
Published on
2018-19 நிதியாண்டுக்கான பி. எஃப் ஆண்டு வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்தார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். வட்டி விகிதத்தினை உயர்த்துவதற்கு கடந்த பிப்ரவரி மாதமே தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்த நிலையில், நிதியமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் வட்டி உயர்வை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் கங்வார் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com