கிணற்றில் தவறி விழுந்த யானை - போராடி மீட்ட வனத்துறையினர்

எர்ணாகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை ஆறு மணி நேர போராட்டத்துப் பிறகு மீட்கப்பட்டது. கேரள மாநிலம் கோதமங்கலம் அருகே கொட்டபாடி பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் இருந்த கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். கிணற்றில் இருந்து வெளிவந்த யானை, மீண்டும் காட்டிற்குள் ஓட்டம்பிடித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com