Uttar Pradesh || உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13ம் நாள் காரியம் செய்த முதியவர்

உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13ம் நாள் காரியம் செய்த முதியவர்

Uttar Pradesh || உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13ம் நாள் காரியம் செய்த முதியவர் பாக்பத் பகுதியைச் சேர்ந்த பல்ஜோர் சிங் என்ற முதியவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் தான் தனது மறைவிற்குப் பிறகு இறுதிச் சடங்குகளால் மகளுக்கு எந்தவொரு பொறுப்பும், நிதிச் சுமையும் ஏற்படக் கூடாது என அவர் எண்ணியுள்ளார்... ​இதனால், உயிருடன் இருக்கும்போதே தனது 13ம் நாள் காரியத்தைத் தானே முன்னின்று பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இதில் சுமார் 900 பேருக்குத் தடபுடலாக விருந்து அளிக்கப்பட்ட நிலையில், பல்ஜோர் சிங்கும் விருந்தினர்களை வரவேற்று அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ​மேலும், பாரம்பரிய தலைப்பாகை அணியும் சடங்கை நடத்தி குடும்பப் பொறுப்புகளைப் பேரன் முகுலிடம் ஒப்படைத்தார். இந்த வினோத நிகழ்வில் உத்தரப்பிரதேச அமைச்சர் கே.பி. மாலிக் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.

X