

டெல்லியில் நடைபெற்ற குதிரை கண்காட்சி விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். குதிரை சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், குதிரைகள் மீது அமர்ந்து சிறுவர்கள் பயணிக்கும் நிகழ்வு, குதிரை கொண்டு உயரம் தாண்டுதல் மற்றும் இரவில் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் அணிவகுப்புகள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.