

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பைப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், பிளாமிங்கோ பறவைகள், கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளன. நீண்ட கழுத்துடன், இளஞ்சிவப்பு வண்ணத்தில் காணப்படும் இந்தப் பறவைகளை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.