மனைவியின் உடலை குக்கரில் சமைத்த கணவர்... வெளியான திடுக்கிடும் தகவல் | Murdered | Cooker
தெலங்கானாவில் முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி வேகவைத்து ஏரியில் வீசிய சம்பவத்தின் பின்னணி குறித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர், தனது மனைவி மாதவியை கொடூரமாக கொலை செய்த வழக்கின் பின்னணியை காவல் ஆணையர் சுதீர் பாபு விளக்கினார். தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை கொலை செய்ய முடிவெடுத்த குருமூர்த்தி, இதற்காக குழந்தைகளை உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மாதவியை பலமுறை சுவற்றில் மோதி, கழுத்தை நெரித்து கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி பெரிய கடாயில் வேகவைத்து, அதனை ஏரியில் வீசியுள்ளார். குழந்தைகள் மற்றும் மாதவியின் பெற்றோரிடம், மாதவியை காணவில்லை என நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு கொடூரம் இருந்தது விசாரணையில் அதிர்ச்சி அளித்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
