குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய்யான தகவல் கூறி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் 1965ஆம் ஆண்டிற்கு பிறகு குடியேறிய 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி குடியுரிமையை, நாராயணசாமி முதலில் வழங்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.