வருமான வரித்துறை சோதனை நடந்த அன்றே தொழிலதிபர் தற்கொலை
பெங்களூரு நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அதே நாளில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு ரிச்ச்மண்ட் சர்கிள் அருகே உள்ள லாங்ஃபோர்டு சாலையில் அமைந்துள்ள கான்ஃபிடன்ட் குழும அலுவலகத்தில் வைத்து அந்தக் குழுமத்தின் தலைவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பான்சருமான சி.ஜே.ராய் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த போது, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
