இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து - 18 பேர் பலி

இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து - 18 பேர் பலி
Published on

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில், நிலச்சரிவில் பயணிகள் சென்ற பேருந்து சிக்கி 18 பேர் உயிரிழந்த‌னர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கியது. அதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com